ஐடிஎம் ஈஸ்டன் கம்பசில் இரத்ததானமுகாம்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரத்ததானமுகாம்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.

ஐடிஎம் கல்வி நிறுவகத்தின் கிழக்கு மாகாண வளாகமான ஐடிஎம் ஈஸ்டன் கம்பசில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இரத்தானமுகாம் ஒன்று நடாத்தப்பட்டது.

ஐடிஎம் ஈஸ்டன் கம்பசின் பணிப்பாளர் ரி.சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததானமுகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் செல்வி ஜி.சுகன்யா உட்பட இரத்த வங்கி தாதியர்கள்,ஊழியர்கள்,உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

ஐடிஎம் ஈஸ்டன் கம்பசின் மூன்றாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்த இரத்தான முகாமில் பெருமளவான இளைஞர் யுவதிகள் மற்றும் கல்வி நிலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.