மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக சுவிஸ் உதயம் அமைப்பினரால் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் இன்றை பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு,குமாரபுரம் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் உள்ள வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
கணவனை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மூன்றிற்கான வாழ்வாதார உதவியாக சுவிஸ் உதயத்தின் உபபொருளாளர் பேரின்பராஜா மற்றும் அவரது நண்பர் பேர்னில் வசிக்கும் பீற்றர் ஆகியோரின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி ரொமிலா செங்கமலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது வாழ்வாதார உதவியாக கோழிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அவர்களின் நிலைமைகள் குறித்தும் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடினார்கள்.