பெரிய கல்லாறு மெதடிஸ்த ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மிக விசாலமானதும் 35 அடி உயரமானதும் ஆன நத்தார் மரம் (04.12.2021) அன்று மாலை பெரிய கல்லாறு மெதடிஸ்த திருச்சபை போதகர் Rev.வினோத் ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நத்தார் தினத்தை முன்னிட்டு வருடாவருடம் பெரிய கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் இளைஞர் அணியினரால் மிக பிரமாண்டமான முறையில் நத்தார் மரம் அமைப்பது வழமை அதே போன்று இம்முறையும் நத்தார் மரம் அமைத்து ஒளியூட்டப்பட்டு மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றது.