வட்டியில்லாத வங்கி முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் செயலமர்வு...!!


வட்டியில்லாத வங்கி முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் செயலமர்வு ஒன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ,வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள்,ஊழியர்களுக்காக வேண்டி நேற்று புதன்கிழமை (22) நடைபெற்றது.

கிண்ணியா அமானா வங்கியின் ஏற்பாட்டில் கிண்ணியா அமானா வங்கி முகாமையாளர் இம்ரான் பதூர்டீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வட்டி இல்லாத வங்கி முறைமையின் இயக்கம்,அதன் நன்மைகள்,வாடிக்கையாளர்களுக்கு எவ்வாரான நன்மைகள் கிடைக்கின்றன.மற்றும் அமானா வங்கியின் செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது முழுமையாக தெளிவுபடுத்தப்பட்டன.

இதற்கு பிரதான வளவாளராக அமானா வங்கியின் தலைமைக்காரியால வங்கி முறைமை மற்றும் செயற்பாடுகள் முகாமையாளர் மூவாத் முபாரக் அவர்களினில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.