106 நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரொன் கொரோனா வைரஸ்...!!


ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வருகின்ற ஒமைக்ரொன் வைரஸ், தென் ஆபிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது.

இந்த ஒரு மாத காலத்தில் ஒமைக்ரொன் வைரஸானது, 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலும், ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரொன் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒமைக்ரொன் வைரஸின் பரவில் அதிகளவில் தொடர்வதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் தென் ஆபிரிக்காவில் இந்த ஒமைக்ரொன் தொற்றின் பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒருரே நாளில் 27,000 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி நேற்று(22) இந்த எண்ணிக்கை 15, 424 ஆக குறைந்துள்ளது.