எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகள் அல்லது சட்ட விரோதமான சொத்து குவிப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் 1917 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளை ஏற்க 1917 என்ற எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பல வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பல்வேறு நபர்கள் சொத்துக்களை குவித்துள்ளதை அவதானித்ததை அடுத்து இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபோன்ற தகவல்களை விசாரிப்பதற்காக சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவும் அண்மையில் நிறுவப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்தப் பிரிவு உள்ளது.