மட்டக்களப்பு- மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் 6 மாத கால கற்கை நெறிகள் ஆரம்பம்...!!


மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ம் கல்வியாண்டுகான புதிய NVQ 3 மற்றும் 4 மட்ட 6 மாத கால கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக்கற்கை நெறிகளுக்கு தரம்-9 தரம்-10 சித்தியடைந்த மாணவர்களும் க. பொ. த சாதாரணதரம் சித்தியடைந்த மாணவர்களும் மற்றும் க. பொ. த உயர்தரம் கற்ற மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

1.நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர்களுக்கான சான்றிதழ்

2. கணிய அளவை உதவியாளர்களுக்கான சான்றிதழ்

3. கணினி வன்பொருள் பற்றிய சான்றிதழ்

4. கணினி கிராபிக் வடிவமைப்புக்கான சான்றிதழ்

5. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்களுக ;கான சான்றிதழ்

6. வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள் திருத்துதலில் சான்றிதழ்

7. மரக்கைப்பணி தொழில்நுட்பவியலாளர்( கட்டடம்)

8. ஆடை தைத்தல்( ஆண் மற்றும் பெண் ) தொடர்பான சான்றிதழ் போன்ற இவ்வாறான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மாதாந்தம் 4000 ரூபா நிபுணதா சிசு சவிய புலமைப்பரிசில் உதவித்தொகை, மாதாந்தம் 1000 ரூபா உதவிப்பணம், மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன் டிக்கட் வசதி, சுயதொழில் தொடங்குவதற்கு கடன் வசதி வங்கி மூலமாக பெற்றுத்தருதல் போன்ற மேலதிக சலுகைகளும் வழங்கப்படவுள்ளது.

மேலதிக விபரங்களையும் விண்ணப்ப படிவங்களையும் தொழில்நுட்பக்கல்லூரி தொழில் வழிகாட்டல் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
தொலைபேசி இல 06522248727