பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் இன்று காலை 8.30மணி தொடக்கம் இன்று மாலை 4.00மணி வரையில் இந்த இரத்தனமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலை,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை போக்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகிய வற்றின் இரத்த வங்கி பிரிவினர் இணைந்து இந்த இரத்ததானமுகாமை நடாத்திவருகின்றனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ரி.விவேக்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,கிராம தலைவர்கள்,கழக முக்கியஸ்தர்கள்,வைத்தியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
மாலை 4.00மணி வரையில் நடைபெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் இரத்தம் வழங்கக்கூடிய அனைவரையும் கலந்துகொண்டு இரத்தக்கொடைசெய்து ஒரு உயிரை காப்பாற்ற உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.