மட்டக்களப்பு- கல்குடா எஸ்.கே.எம் கராத்தே பாடசாலையினால் மாணவர்கள் கௌரவிப்பு...!!


கல்குடாவில் இயங்கி வரும் எஸ்.கே.எம் கராத்தே பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்றது.

கராத்தே பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.வஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், Global international championship  இனால் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக நடாத்தப்பட்ட சர்வதேச kata மற்றும் kumite போட்டிகளில் பங்குபற்றி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அதிதியாக கந்தளாய் வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.மர்சூக் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.