இந்துக்களின் தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று காலை நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று தீபத்திருநாள் தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாள் விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளைப்பேணியவாறு பூஜைகள் நடாத்தப்பட்டன.
இதன்போது கொரனா அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபட்டு நாடு சுபீட்சம் அடையவேண்டி விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.