இந்த ஆண்டு 'நன்றி தெரிவிக்கும் நாளை' (Thanks giving) முன்னிட்டு 2 வான்கோழிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இன்றைய காலகட்டத்தில் அரசியல், சமூக, கலாசார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ கொண்டாடப்படுகின்றது.
குறிப்பாக அத்தினத்தன்று அமெரிக்கர்கள் வான்கோழி இறைச்சியை உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இருப்பினும், அமெரிக்காவின் ஜனாதிபதியினால், நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன்பு 2 வான்கோழிகளுக்கு மட்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவது அங்கு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படும் 2 வான்கோழிகளும், நாட்டில் உள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.