மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் பரவல்கள் கட்டுப்படுத்தப்பட்டுவரும் நிலையில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இந்த நிலையில் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் 14சுகாதார வைத்தி அதிகாரிகள் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திறந்த பல்கலைக்கழகம்,நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலயம்,ஊறணி சரஸ்வதி வித்தியாலயம்,இருதயபுரம் மாநகரசபை பாலர் பாடசாலை ஆகியவற்றில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.