வெல்லாவெளி வாய்க்காலில் ஆணின் சடலம் மீட்பு


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலிலிருந்து இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம்-சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(01) மாலை வீட்டில் இருந்து வயலுக்கு போனவர் இன்று (02) வீடு திரும்பாத நிலையில் இன்று மாலை ஆடு மேய்கின்றவர்களினால் 38ம் கிராமம் வைரவர் ஆலயத்துக்கு அருகாமையினால் உள்ள வயல் வடிகான் நீருக்குள் துவிச்சக்கரவண்டியும் சடலமும் கிடப்பதனை கண்டு அதனை கிராம மக்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த சடலம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.