டயமண்ட் விளையாட்டு மைதானம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இளைஞர்களின் பாவனைக்காக திறந்து வைப்பு...!!


கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட வந்தாறுமூலை மேற்கு டயமண்ட் விளையாட்டு மைதானம் இன்று இளைஞர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் இன்று 2021.09.23 ஆந் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவுவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் தேனுக வித்தானக, பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான ப.சந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்திக் குழு செயலாளர் சட்டத்தரணி திருமதி.மங்களா சங்கர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.