மட்டக்களப்பில் சமாதான நீதவான்கள் ஏழு பேர் சத்தியப்பிரமாணம்...!!


தீவு முழுவதற்குமான சமாதான நீதவான்களுக்கான நியமனங்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் செவ்வாய்க்கிழமை 28.09.2021 வழங்கி வைத்தார்.

அவரது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதனையடுத்து ஆறுமுகம் தேவராசா, நவரெத்தினம் திருநாவுகரசு, கருணாகரன் சங்கீதா, தில்லைநாதன் நித்திஸ்வரன், சிவமார்க்கன்டு சுஜாகரன், ராமமூர்த்தி நிஷாந்தன், பாக்கியராஜா தினேஸ்குமார் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதவான் ரீ.கருணாகரன் முன்நிலையில் தீவு முழுவதற்க்குமான சமாதான நீதவான்களாக சத்தியப்பிரமானம் செய்துகொன்டனர்.