களுவன்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை –கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் வீடொன்றில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாhருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கண்டறியும் வகையிலான விசேட நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதனடிப்படையில் களுவன்கேணியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது 15000மில்லிலீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திக்கான கோடா 140,000மில்லி லீற்;றர் மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திசெய்யும் பொருட்களும் மீட்கப்பட்டன.

இதன்போது இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை நடாத்திவந்ததாக சந்தேகதிக்கப்படும் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.கைப்பற்றப்பட்ட பொருட்களையும் கைதுசெய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.