நான்கு கட்டங்களாக அனைத்து பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஆரம்பித்தல் தொடர்பான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

அதன் படி, அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 1: தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 200க்குக் குறைந்த பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை மாத்திரம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 2: மாணவர்களின் எண்ணிக்கை 200க்கு அதிமான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் உள்ள அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கு குறைவாக உள்ள அனைத்து பாடசாலைகளின் முழு வகுப்புகளும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 3: அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12, 13 மற்றும் முழு மாணவர்களின் எண்ணிக்கை 200க்கு குறைந்த பாடசாலைகளின் அனைத்து தரங்களும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 4: அனைத்து பாடசாலைகளினதும் அனைத்து தரங்களும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டத்தையும் நடைமுறைப்படுத்த முன்னர், கொரோனா தொற்று பரவல் நிலை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளாக முன்னர் அனுப்பட்பட்ட நடைமுறைகளும் மேலதிகமான சில ஏற்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் அல்லது இந்த ஒவ்வொரு கட்டங்களும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பான அறிவித்தல் இவ்வழிகாட்டலில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.