திருகோணமலையில் டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து...!!


திருகோணமலை மாவட்டத்தின் ஆண்டான்குளம் குறுக்குச்சந்தியில் இன்று(29) காலை டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஆண்டான்குளம் குறுக்கு சந்தியில் மண் ஏற்றும் டிப்பர் கள்ளத்தனமாக உள் வீதியில் பிரவேசிக்கும் போது மோட்டார் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.