செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது அமைச்சர் ஆலோசனை

(புருசோத்)
செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.


தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு  கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆலோசித்து வருகின்றது.