(புருசோத்)
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கின் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியூதீனின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – புதுக்கடை நீதிமன்றில் இன்று (23) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே ரிஷாட் பதியூதீனின் பெயரும் சந்தேகநபர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது