(புருசோத்)
நாட்டில் ஒரு மாதத்துக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அரசுக்கு எதிரான நபர்களின் அறிக்கைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
இலங்கையில்,71ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல், 99ஆயிரம் மெட்ரிக் தொன் ஓட்டோ டீசலை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கையிருப்பில் வைத்துள்ளது.
கொவிட் நிலைமைக்கு முன் நாட்டில் 5500 மெட்ரிக் தொன் ஓட்டோ டீசல் மற்றும் 3300 மெட்ரிக்தொன் பெற்றோல் என்பன தினமும் பயன்படுத்தப் பட்டதாக அவர் மேலும் கூறினார்.