சதொச மூலம் 20 பொருட்களின் நிவாரணப் பொதி இன்று முதல்

 


(புருசோத்)

சதொச மூலம் 20 பொருட்களின் நிவாரணப் பொதி இன்று முதல் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு  வழங்கப்படவுள்ளது.

 அரிசி, மா, சீனி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நாடு முழுவதும் நுகர்வோருக்கு 1998 ரூபா விலையில் சதொச நிறுவனம் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். 

பொதிகளைப் பெற  1998 ஹொட்லைன் அல்லது www.lankasathosa.lk மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் இந்நிவாரணப் பொதிகள் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சதொச விற்பனை நிலையங் களிலிருந்து 24 மணி நேரத்துக்குள் விநியோகக் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.