புன்னைக்குடா விகாரையில் சிறுவர் பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பிரதம பிக்கு கைது

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விகாரையின் பிரதம பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பிக்கு இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வேறொரு மாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்டகாலமாக குறித்த பிரதம பிக்கு அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.