நாளைமுதல் ஒரு வாரத்தை தடுப்பூசி வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


(புருசோத்)

நாளைமுதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு   தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெருமளவானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்கள் காரணமாகவும் தவறான கருத்துக்களாலும் இவர்கள்  தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமைக்கு இதுவே காரணம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.