பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் பிரசன்னம் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

100வருடத்திற்கு மேல் பழமையான இந்த ஆலயமானது அற்புதங்கள் நிறைந்ததாகவும் கதிர்காமம் செல்லமுடியாதவர்கள் வழிபடும் ஆலயமாகவும் இருந்துவருகின்றது.

இன்று காலை பெரியகல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் மஹோற்சவ கிரியைகள் நடைபெற்றன.

இதன்போது கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்க மத்தியில் தாள,மேள வாத்தியங்கள் முழங்க மந்திர கோசங்களுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது கொரனா தொற்று காரணமாக உற்சவ நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.