ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு

இன்றைய தினம் ( 2021.07.15 ) திருகோணமலை மாவட்ட மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் தரம் 05 இல் கல்வி பயிலும் 280 மாணவர்களுக்காக பிரதியாக்கம் செய்யப்பட்ட பயிற்சிப் புத்தகங்கள் உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு F.C.L Fernando அவர்கள் புத்தக பிரதிகளை ஈச்சிலம்பற்று கோட்டக்கல்வி அலுவலர் திரு V.அருள்நேசராசா அவர்களிடம் வழங்கி வைத்தார்.

அத்தோடு தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கான இரண்டு புத்தக அலுமாரிகளும் கல்லூரியின் பிரதி அதிபர் திரு.ம.பிரகாஷ் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கல்விசார் செயற்பாடுகளுக்கான ஒரு பல்லூடக எறிவை ( Multi Media Projector ) மற்றும் அதற்குரிய திரை ( Projector Screen ) மற்றும் Speaker என்பன எமது பேரவையினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வியமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு S.சுதர்சன் , திட்டப் பணிப்பாளர் திரு. A.C.M பசில், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு செ .யுகன் மற்றும் அதிபர்களான திரு .S .தயாபரன், திரு .M. செல்வநாயகம் , திரு. T. உதயணன் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.