மட்டக்களப்பு மாவட்டத்தில தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் பணி - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று இரண்டாம் கட்ட கொவிட் சைனோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் க.கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பெருமளவானோர் தமக்கான இரண்டாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையும் தனது இரண்டாவது கொவிட் தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டார்.

இதேபோன்று இன்றைய தினம் 60வயதுக்கு மேற்பட்டவர்களும் வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இன்று தமது சைனோபாம் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டனர்.