மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் பரவும் ஆபத்து உள்ளது - பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 69531 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக 19800 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 44கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 7480பேர் இதுவரையில் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவுமு; அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுதாவளை சிறுவர் இல்லம் ஒன்றில் 22சிறுவாகள் கொரனா தொற்றுக்குள்ளானதை தொடர்ந்து குறித்த இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் தொற்றுக்குள்ளானவருக்குரிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டு திறக்கப்படவுள்ளது.இதில் 100நோயாளர்களை உள்வாங்கமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 07 கொவிட் வைத்தியசாலைகளில் இதுவரையில் 6075தொற்று நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு,5351பேர் இதுவரையில் குணமாகி வீடுசென்றுள்ளதுடன் 10பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இலங்கை நாட்டுக்குரிய வேரியன் கண்டுபிடிக்கப்பட்டது.பிரித்தானியாவுக்குரிய அல்பா வேரியனும் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவரையில் டெல்டாவேரியன் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்படவில்லை.கண்டுபிடிக்ககூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணியதாக செயற்படவேண்டும்.