மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 79கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மூன்றாவது அலையில் 6356கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 79கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17பேரும்,செங்கலடி பகுதிகளில் 14பேரும்,களுவாஞ்சிகுடியில் 11பேரும்,ஏறாவூர்,வாழைச்சேனை,காத்தான்குடி ஆகிய பகுதிகளில் தலா 06பேரும்,பட்டிப்பளை,ஆரையம்பதி போன்ற பகுதிகளில் தலா மூன்று பேரும்,கிரான்,ஓட்டமாவடி பகுதிகளில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7339கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100பேர் மரணமடைந்துள்ளனர்.தொடர்ந்தும் 946பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
மூன்றாவது அலையில் இதுவரையில் 6356கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 91பேர் மரணமடைந்துள்ளனர்.கடந்த மாதம் 3387கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் கடந்தவாரம் 593பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படவுள்ளது.மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாமாங்கம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மாமாங்கம் பகுதியில் தொடர்;ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50ஆயிரம் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன.அதில் 370024தடுப்புசிகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன.இரண்டாம் கட்ட தடுப்புசியானது 14981பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 12000ஆசிரியர்கள் உள்ளனர்.அவர்களில் 7000பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.