முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74வது சிரார்த்த தின நிகழ்வு

முதல் தமிழ் பேராசிரியர் என்ற சிறப்பினைப்பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74வது சிரார்த்த தினம் இன்றாகும்.

தமிழ் உலகுக்கும் இலங்கை நாட்டுக்கும் பெருமைசேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு,கல்லடி இராமகிருஸ்மிசனின் வளாகத்தில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இன்று காலை வழிபாடுகள் நடைபெற்றன.


சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதன்போது சமாதியில் மலர் தூவப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபைத் தலைவர் க. பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் உள்ள திருநீற்றுப்பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுவாமியின் பாடல்கள் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.வுhசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.