இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலருடன் கைகலப்பில் ஈடுபட்ட நிலையிலேயே துப்பாக்கிசூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரைணைகளை முன்னெடுத்துவருகின்றது.