இன்று(23)காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 178கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40பேரும்,ஓட்டமாவடியில் 26பேரும் ஏறாவூரில் 22பேரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 19பேரும் செங்கலடி பிரிவில் 13பேரும் ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11பேரும் களுவாஞ்சிகுடி,கோறளைப்பற்று மத்தியில் தலா 10பேரும் வெல்லாவெளி பகுதியில் 09Nபுரும் கிரான் சுகாதார பிரிவில் 08பேரும் வாகரை சுகாதார பிரிவில் 05பேரும் பட்டிப்பளை சுகாதார பிரிவில் 02பேரும் 02பேர் சிறைச்சாலையிலும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.மரணமடைந்தவர் செங்கலடி சுகாதார பிரிவினை சேர்ந்தவர்;.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மொத்தமாக 5400கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 76பேர் மரணமடைந்துள்ளனர்.இதுவரையில் 3623பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 1524பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
மூன்றாவது அலையின்போது 4417பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன் 67பேர் மரணமடைந்துள்ளனர்.கடந்த ஏழு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1026 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் சராசரியாக நாளொன்றுக்கு 150-160 பேர் வீதம் இனங்காணப்பட்டுவருகின்றனர்.
காத்தான்குடி,கோறளைப்பற்று மத்தி,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் கொரனா தொற்று அதிகரிப்பினால் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளது.காத்தான்குடி சுகாதார பிரிவில் 08கிராம சேவையாளர் பிரிவுகளும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 கிராம சேவையாளர் பிரிவுகளும் கோறளைப்பற்று மத்தியில் 01 கிராம சேவையாளர் பிரிவும் தனமைப்படுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு காரணமா ஒன்றுகூடல்கள் எனவும் ஒன்றுகூடல்களை தவிர்ப்பதன் மூலமே கொரனா தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.