மட்டக்களப்பு வின்;சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கணிதப் பிரிவில் இருந்து தோற்றிய 56 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அடிப்படைத் தகுதியை பெற்றிருப்பதுடன் 09 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விஞ்ஞான பிரிவிலிருந்து 99 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிப்படைத் தகுதியை பெற்றிருப்பதுடன் 07 மாணவர்கள் வைத்தியத்துறைக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வர்த்தகப்பிரிவில் 37 மாணவிகள் பல்கலைக்கழக அடிப்படை தகுதி பெற்றிருப்பதுடன் 07 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கு தகுதி பெற்றுள்ளனர்.