பயணத்தடை –முடங்கிய மட்டக்களப்பு மாவட்டம்


கொரனா தொற்றினை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளன.

பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று காலை முதல் முழுமையாக முடங்கிய நிலையில் உள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து விற்பனை நிலையங்களை தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகருதிய செயற்பாடுகள் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுதுடன் ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளன.

கொரனா தொற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்த நிலையில் உள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுக்கமான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் படையினரும் இணைந்து வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகின்றது.