வழமைக்கு திரும்பிய மட்டக்களப்பு –தீவிர நடவடிக்கைகளில் படை,பொலிஸ்


நாடளாவிய ரீதியின் இன்று அதிகாலை முதல் பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் வழமை நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்களின் நடமாட்டம் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் செலுத்திருவதையும் காணமுடிகின்றது.

ஒரு சில பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ள நிலையில் பொலிஸாரும் படையினரும் இணைந்து சன நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தனர்.

பொது போக்குவரத்துகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்கள் பயணம் செய்வது மிகவும் குறைந்தளவிலேயே உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் வழமைபோன்று இயங்குகின்றபோதிலும் மக்களின் வருகை மிகவும் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒலிபெருக்கிககள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.