நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60க்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 12 உத்தியோகத்தர்கள் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் தற்காலிகமாக பொதுமக்களுக்கான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 12பேர் கொரனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது குறித்த பிரதேசத்தில் எல்லை மீறிச்செல்லும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
தற்போது உள்ள தொற்றானது கடந்த தொற்றுக்களை விட வீரியம் கூடியதாகவும் இளம் வயதினரை அதிகளவில் தாக்கும் நிலை காணப்படுவதனால் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.