மட்டக்களப்பு கோவில்குளத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்றைய தினம் 12கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இன்றைய தினம் 17கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 11பேரும் காத்தான்குடி சுகாதார பிரிவில் 06பேரும் ஏறாவூர் சுகாதார பிரிவில் 05பேரும் செங்கலடி சுகாதார பிரிவில் 04பேரும் ஆரையம்பதியில் மூவரும் கிரான் சுகாதார பிரிவில் 02பேரும் பட்டிப்பளையில் 02பேரும் ஓட்டமாவடி,வவுணதீவு,வாழைச்சேனை சுகாதார பிரிவுகளில் தலா ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இன்று கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
காத்தான்குடியை சேர்ந்த 68வயது பெண்னொருவர் கொரனா தொற்றுக்காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் வாழைச்சேனை வைத்தியசாலையில் கொரனா தொற்றுக்குள்ளான நிலையில் மூன்று மாத கர்ப்பிணியொருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இதேநேரம் பெரியகல்லாறு வைத்தியசாலையில் கொரனா நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அது தொடர்பான வழங்குனரை மாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.