சின்ன ஊறனி பகுதியில் 14 பேருக்கு தொற்று உறுதி


மட்டக்களப்பு சின்ன ஊறனி பகுதியில் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று  உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன தெரிவித்துள்ளார். 

குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு கடந்த 18 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று 23.05.2021 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை 155 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது  தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை   சிகிச்சைகளுக்காக கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு

அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.