மட்டக்களப்பு புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை,புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு, கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மஹோற்சவமானது 10தினங்கள் நடைபெறுகின்றது.

ஆலயத்தில் நேற்று மாலை சப்புரத்திருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் தினமும் பிற்பகல் மாலை வேளைகளில் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

தலைமையில்;கள் நடைபெற்றன.

இன்று காலை கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து அம்பாள் உள்வீதியுலா சென்று பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் அம்பாள் இரதத்தில் ஏறி பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.

இன்றைய இந்த இரதோற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளில் பங்கெடுத்ததுடன் பக்தர்களுடன் இணைந்து ரதோற்சவத்திலும் கலந்துகொண்டார்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளை பேணிய வகையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பான முறையில் இரதோற்சவம் நடைபெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்தின் அம்பாளின் தீர்த்தோற்சவம் நடைபெற்று மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.