கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட சந்திரகாந்தன் எம்.பி.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கொவிட் 19 தடுப்பூசியேற்றப்பட்டது.

இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்திற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

இன்றைய தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் 19தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.