போரதீவுப்பற்று பிரதேசசபையினால் இலவச அமரர் ஊர்தி சேவை ஆரம்பம்


(ரஞ்சன்)

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையினால் இலவச அமரர் ஊர்தி சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் சபை தீர்மானத்துக்கு அமைவாக இந்த அமரர் ஊர்தி சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசபையில் கைவிடப்பட்;ட நிலையில் இருந்த வாகனம் ஒன்று பிரதேசசபையின் தவிசாளரினால் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு இந்த சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

 இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றபோது பிரதேசசபை செயலாளர் பா.சதீஸ்கரன் உப தவிசாளர் பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு இருந்த குறைபாட்டை இன்றில் இருந்து போரதீவுப்பற்று பிரதேசசபையின் இலவச  அமரர்  ஊர்தியானது நிவர்த்திசெய்யும் என பிரதேசசபை தவிசாளர் தெரிவித்தார்.

இந்த இலவச அமரர் ஊர்தி சேவையினை போரதீவுப்பற்று பிரதேசசபை அலுவலக இலக்கம் 0652056115 தவிசாளர் இலக்கம் 0755200005 செயலாளர் இலக்கம் 0774690919 ஆகிய இலக்கங்களில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமினால் ஜீகே.அறக்கட்டளை ஊடாக அமரர் ஊர்தி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையும் அதனை ஆரம்பித்துள்ளதானது மேலும் வறிய மக்களுக்கு நன்மையளிப்பதாக அமையும்.