வலையிறவு பாலத்தடியில் கைக்குண்டு மீட்பு


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று (25) காலை கைக்குண்டு ஒன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய கைக்குண்டு மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகள் காலத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் குறித்த பகுதிக்கு வருகைதந்து சோதனைகளை முன்னெடுத்தனர்.

குறித்த கைக்குண்டினை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.