செங்கலடி உதயசூரியன் உதவிக்குழுவினால் வறியமாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பும், கௌரவிப்பு நிகழ்வும்.

 (செங்கலடி நிருபர் - சுபா)

மட்டக்களப்பு செங்கலடி – உதய சூரியன் உதவிக்குழுவினரால் வறியமாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பும், கௌரவிப்பு நிகழ்வும் இன்று ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

உதய சூரியன் உதவிக்குழுவின் தலைவர் திரு என்.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வானது சுகாதார வழிமுறைகளைப்பின்பற்றி இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் அதிதிகளாக செங்கலடி பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா , ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.இந்துஜன், பிரதி அதிபர் என்.குகநாதன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் எம்.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எல்லை நகர் , ஏறாவூர்-04ம் குறிச்சி பிரதேசத்தில் வரிய குடும்பங்களைச் சேர்ந்த  தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உடகரணங்கள் வழங்கிவைக்கபட்டதுடன்
கடந்த ஆண்டில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கபட்டதுடன்.

அதிதிகளுக்கும் ;அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை அணிவிக்கபட்டு நிணைவுச்சின்னமும் உதய சூரின் உதவிக்குழுவினரால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதே வேளை உதயசூரியன் உதவிக்குழுவில் சிறப்பாக கடந்தவருடம் செயற்பட்டவர்களும் கௌரவிக்கபட்டனர் இதில் சிறந்த சமூகசேவை ஆலோகராக எஸ்.கிருசாந் அவர்களும் அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளருக்கா எம்.கிசாந் அவர்களும் கௌரவிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதி செங்கலடி பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ் தவேந்திரராஜா கொரோனா நிலமை , பாதுகாப்பு மற்றும் தற்போது அதிகரித்துவரும் டெங்கு நோய் தொடர்பான விளிப்புணர்வு கருத்துக்களையும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தினார்.