களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றவருக்கு கொரனா தொற்று


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காத்தான்குடியை சேர்ந்த கொரனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரத்தமாற்று செய்வதாகவும் இன்று அவ்வாறு இரத்தமாற்று சிகிச்சைக்காக வந்தவருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பெரியகல்லாறில் 16 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ச்சியாக அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் 68பேருக்கு பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அது தொடர்பான அறிக்கைகள் கிடைக்கவில்லையெனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.