புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி,ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் புதுவருட பிறப்பு சிறப்பு பூஜை இன்று காலை நடாத்தப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப்பேணியவாறு சமூக இடைவெளியை பேணியவாறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று அதிகாலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று புதுவருட சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது நாட்டில் கொரனா அச்சுறுத்தல் நீங்கவும் அதனால் பீடிக்கப்பட்டவர்கள் சுகம்பெற்று வழமைக்கு திரும்பவும் அரசாங்கம்,நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிவேண்டி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தினால் புதிய ஆண்டினை குறிக்கும் வகையிலான பஞ்சாங்க நாட்காட்டியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.