கடந்த 22ஆம் திகதி இருவர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தி தொடர்ச்சியான அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதனடிப்படையில் பெரியகல்லாறு கலைமகள் வீதி தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களுக்கு தொடர்ச்சியான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று மாலை கலைமகள் வீதியில் கொரனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 47பேர் அன்டிஜன் சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி ஒருவரிடம் ஏற்பட்டிருந்த தொற்று சில மாணவிகளையும் தொற்றுக்குள்ளாக்கியுள்ளதாகவும் குறித்த மாணவியுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இதுவரையில் பெரியகல்லாறு பகுதியில் 97பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு உட்பட அதனை அண்டியுள்ள பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.