(ரஞ்சன்)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் நீராடுவதற்காக சென்றவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்துக்குட்பட்ட திருப்பழுகாமம் வன்னிநகர் கிராம உத்தியோகஸஸ்தர் பிரிவில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான வல்லிபுரம் ஞானசேகரம் (55வயது)என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
அவருடைய தொப்பி மேல் அங்கி துவிச்சக்கர வண்டி ஆகியவற்றை ஆத்துக்கட்டு பாலத்தில் வைத்து விட்டு குளிக்கச்சென்றவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி காணாமல் போனவரை திருப்பழுகாமம் மீனவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து மீன்பிடி தோனிகள் மூலம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலும் கண்டுபிடிக்காத நிலையில் தேடுதல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வன்னிநகர் கிராம உத்தியோகத்தர், பிரதேச ராணுவத்தினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கும் அறிவித்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.