(ரஞ்சன்)
மட்டக்களப்பு,திருப்பழுகாமத்தினை சேர்;ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நத்தார் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது ஆற்றை குறுக்காக நீந்தி கரையை கடக்க முற்பட்டபோது; நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம்,விபுலானந்தா வித்தியாலய பாடசாலை வீதியிலுள்ள சோமசுந்தரம் திசாந்தன் 29 வயதுடைய என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவுஸ்ரேலியா நாட்டு கடற்படையினர் விமானப்படையினர் நீரில் மூழ்கி காணாமல்போனவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் நேற்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நான்கு இளைஞர்கள் நீந்தியதாகவும் அதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
