ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்


ஈழத்து திருச்செந்தூர் மற்றும் சிதானந்த தபோவனத்தின் ஸ்தாபரும் மகா சித்திருமான சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மகா சமாதியடைந்த தினத்தினை முன்னிட்டு விசேடஇரத்ததான முகாம் இன்று நடாத்தப்பட்டது.

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள தபோவனத்தில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பாரிய இரத்த பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்தான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள் தாதியர்கள் கலந்துகொண்டு இரத்ததான முகாமினை நடாத்தினர்.

இதன்போது பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்ததான வழங்கியமை குறிப்பிடத்தக்கது.