மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் விசாரணை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன குறிப்பிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தின் ஓய்வூ பெற்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமைத்துவத்தின் கீழ் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது .
இக்குழுவில்
நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா ,
நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ரோஹண ஹபுகஸ்வத்த ,
பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண ,
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ,மற்றும்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாவர்.